வெள்ளோட்டம்

சிறுதுளி பெரு வெள்ளம்; ஒரு வாக்கு பெரு மாற்றம் !!!
ஒருங்கிணைந்த கட்டமைப்புள்ள சிங்கார சென்னையாக்குவதற்காக தேர்தலுக்கு முன்னால் “வெள்ளோட்டம்” காட்டி எச்சரித்திருக்கிறது, வான்மழை !… எப்போதும் போல “நிவாரண தொகை” வாங்கியவுடன் மறந்துவிட்டால், 5 மூலங்கள் (நிலம் நீர் நெருப்பு காற்று வானம்) தனித்தோ, ஒன்றோடு ஒன்று சேர்ந்தோ செய்யும் “திருவிளையாடலில்” தற்காத்துக்கொள்ள நல்வழி பிறக்காது. அறவழி நடப்போமாக.

குறள் 37:
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
பொருள்:
அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.

Advertisements